கிளிநொச்சி தருமபுரத்தில் சுற்றிவளைக்கப்பட்ட கசிப்பு மையம்

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் 3512 போத்தல் கோடா மற்றும் 71 போத்தல் கசிப்புடன் இருவர் தர்மபுரம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் நேற்று (10.04.2020) இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதிபொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவலை அடுத்து போதைப் பொருள் சட்டவிரோத செயற்பாடுகளுக்கான விசேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி சத்துரங்க தலைமையிலான குழுவினர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை கல்லாறு கிராமத்தில் குறித்த பகுதியினை சுற்றிவளைத்து இருவரை கைது செய்துள்ளதோடு, பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள போது மிகவும் இரகசியமான முறையில் கசிப்பு உற்பத்தியை மேற்கொண்டு வந்துள்ளனர்.

அத்தோடு கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் நேற்றையதினம் விற்பனைக்காக கசிப்பு சிறிய சொப்பின் பைகளில் பொதி செய்யப்பட்டுக்கொண்டிருந்த போதும் சிலர் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com