நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை நிறைவு!

நாட்டிற்கு தேவையான கொரோனா தடுப்பூசிகள் மற்றும் பூஸ்டர் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை நாளையுடன்(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடையவுள்ளது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் பிரசன்ன குணசேன இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அஸ்ட்ராசெனெகா, மொடர்னா, ஸ்புட்னிக், சைனோஃபார்ம் மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 48,560,424 ஆக பதிவாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதில் 6.8 மில்லியன் தடுப்பூசிகள் நன்கொடையாகப் பெறப்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com