
இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் 7 பேருக்கு இருப்பது இன்று (11) உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமை உத்தரவுகளை மீறிய நிலையில் ஒலுவில் தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்ட 28 பேரில் ஐா-எல பகுதியை சேர்ந்த ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
அத்துடன் தெஹிவளையில் ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதன்படி இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 197 ஆகும்.
