சீன வெளிவிவகார அமைச்சர் எரித்திரியாவிற்கு விஜயம்

ஆபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை எரித்திரியாவுக்கு சென்றுள்ளார்.

இதனை அடுத்து அவர் கென்யா மற்றும் கொமோரோஸுக்கும் விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாங்கை வெளிவிவகார அமைச்சர் ஒஸ்மான் சலே மற்றும் பிற மூத்த அதிகாரிகள் அஸ்மாரா சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றனர் என எரித்ரியாவின் தகவல் அமைச்சர் கூறியுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு நாட்டில் தங்கி இருக்கும் அவர் வெளியுறவு வெளிவிவகார அமைச்சர் மற்றும் ஜனாதிபதி இசயாஸ் அஃப்வெர்கியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தகவல் அமைச்சர் கூறினார்.

இது கடன் பொறி இராஜதந்திரம் என அமெரிக்காவால் ஆபிரிக்க பங்காளிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தடுப்பூசி நன்கொடையை சீனா வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com