உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் இரத்து செய்தது காங்கிரஸ்

உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளமையினால், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பரேய்லி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில், ‘பெண்கள் நாங்களும் சண்டையிடுவோம்’ என்ற பெயரில் மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். ஆனால் எவரும் முகக்கவசம் அணியாதமையினால் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளமையினால், உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் இரத்து செய்வதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

குறித்த மாநிலம் முழுவதும் நடைபெற இருந்த 8 பொதுக்கூட்டங்களும் நடைபெறாது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com