நாடு திரும்பிய பசில்: அமைச்சரவையில் மாற்றம் ?

அமைச்சரவையின் முக்கிய ஆறு அமைச்சுகளின் விடயதானங்கள் மாற்றத்திற்குள்ளவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய வருடம் புதிய மாற்றத்துடன் பயணத்தை ஆரம்பிக்குமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கடந்த வாரம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்படி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை விரைவில் மறுசீரமைக்கப்படவுள்ளது.

அமெரிக்கா சென்றிருந்த நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பியுள்ள நிலையில் ஒரிரு நாட்களில் இந்த மாற்றம் இடம்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேநேரம் சில இராஜாங்க அமைச்சு பதவியிலும் மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் நிதி அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருடன் கலந்துரையாடி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com