இழுவை மடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி கையெழுத்து பெறும் நடவடிக்கை!

இழுவைமடி மீன்பிடி முறையை முழுமையாக நிறுத்தக்கோரி இன்று கையெழுத்து பெறும் வேலைத்திட்டம் ஒன்று  கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.

பூநகரி நாச்சிக்குடா சந்தியில் இன்று (புதன்கிழமை) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த கையெழுத்திடும் போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டு கையெழுத்திட்டனர்.

குறித்த வேலைத்திட்டத்தினை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.