யாழ்.மாவட்ட அரச அதிபருடன் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிகள் சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி மற்றும் அவரின் அதிகாரிகளும் யாழ். மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசனை சந்தித்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து, மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பில் உலக உணவுத்திட்டத்தால் யாழ்.மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பாடுகள் பற்றி விரிவாக கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாக உணவுப் பாதுகாப்பு, போசாக்கு குறைபாடு, பாடசாலை மாணவர்களின் மதிய உணவுத்திட்டம் மற்றும் ஜீவனோபாயத்திட்டங்கள் என்பவை தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், எதிர்கால திட்டங்கள் பற்றியும் கருத்து தெரிவிக்கப்பட்டது.