பதவி விலகல் கடிதத்தினை கையளித்தார் ஆளும் கட்சியின் முக்கியஸ்தர்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனது இராஜினாமா ​கடிதத்தை, நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளதை அடுத்தே அவர் இவ்வாறு தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ளார் என்பதுக் குறிப்பிடத்தக்கது.