உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி

இரசாயன உரம், பீடைக்கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்று (புதன்கிழமை) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று இரவு வெளியாகும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இரசாயன உரம், பீடைக்கொல்லி மற்றும் திரவ உரம் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.