மன்னார் மாவட்டத்தில் 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!

மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் நிலையில் கடந்த 23 நாட்களில் 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மன்னார் மாவட்ட கொரோனா நிலவரம் தொடர்பாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் இன்று  (புதன்கிழமை) விடுத்துள்ள கொரோனா நிலவர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில், “மன்னார் மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் புதிதாக 14 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நவம்பர் மாதம் 1 ஆம் திகதி தொடக்கம் 23 ஆம் திகதி வரை 470 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த வருடம் 2846 தொற்றாளர்களும்,மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 2863 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் தற்போது வரை 25 கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளது.என குறிப்பிடப்பட்டுள்ளது.