இலங்கையின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டின் இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு தென்கிழக்காக தற்போது நிலை கொண்டுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசமாக விருத்தியடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாடு முழுவதும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன், மழையுடனான வானிலை நீடிக்குமென எதிர்வுகூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.