தொடர் கொள்ளை; ஐவர் கைதாகினர்!

திருகோணமலை – தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் இன்று (10) ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலையூற்று பிரதேசத்தில் ஒன்றறை மாதங்களாக இடம்பெற்று வந்த தொடர் கொள்ளைச் சம்பவங்கள் அடிப்படியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் மேற்படி ஐவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து தொலைக்காட்சி, குளியலறை பொருள்கள், தையல் இயந்திரம், மின்விசிறி போன்ற பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.