பிரத்தியேக வகுப்புக்களை ஆரம்பிக்கும் திகதியில் மாற்றம்!

நாட்டில் நிலவுகின்ற கொரோனா சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த தனியார் கல்வி நிறுவனங்களை ஜூன் 29ம் திகதி திறக்க அனுமதிக்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஜூன் 15ம் திகதி முதல் நூறுக்கும் குறைந்த மாணவர்களுடன் பிரத்தியேக வகுப்புக்களை நடத்த அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் திருத்தப்பட்டு புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.