இணுவில் விவகாரம்; 13 பேரின் பரிசோதனை முடிவு வெளியானது!

யாழ்ப்பாணம் – இணுவில் மற்றும் ஏழாலை பகுதிகளில் இருந்து கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 13 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இணுவிலில் இருந்து இந்தியாவிற்கு சென்ற இந்திய புடவை வியாபாரி ஒருவருக்கு அண்மையில் கொரோனா தொற்று இருப்பதாக கூறப்படும் நிலையில் முன்னாயத்த நடவடிக்கையாக இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.