விபத்தில் இளைஞன் சாவு; பிறந்தநாளுக்கு சென்று திரும்பிய போது சம்பவம்!

நுவரெலியா – திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பண்ணைக்கு அருகாமையில் இன்று (10) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

ஹட்டன் பகுதியை சேர்ந்த 28 வயதான மனோகரன் கணேஷ் என்பவரே மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

நண்பர் ஒருவரின் வீட்டில் நடைபெற்ற பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டுவிட்டு ஹட்டன் நோக்கி பயணிக்கையிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.