கோவை மாணவி தற்கொலை – பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது!

கோவையில் 12ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த தனியார் பாடசாலையின் முன்னாள் முதல்வர் மீரா ஜாக்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெங்ளூரில் தலைமறைவாக இருந்த மீராஜாக்சனை தனிப்படை பொலிஸார் கைது செய்தனர்.

உயிரிழந்த மாணவி அளித்த முறைப்பாட்டின் மீது பாடசாலை முதல்வர் மீராஜாக்சன் எந்த நடவடிக்கையும் எடுக்காதமை குறித்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் தனியார் பாடசாலை ஆசிரியரின் பாலியல் தொல்லையால் 12ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவத்தில் ஏற்கனவே குறித்த இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.