தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீடிப்பு – முதலமைச்சர்

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மழை, வெள்ள காலத்தில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி, ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த காலகட்டத்தில் கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதிகளவிலானவர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுசேர்வதற்கு அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.