எதிர்பார்ப்பு மிக்க உலகக் கிண்ண இறுதிப் போட்டி இன்று!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் எதிர்பார்ப்பு மிக்க இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

டுபாயில் இடம்பெறவுள்ள இப்போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

நியூசிலாந்து அணி முதன் முறையாக இருபதுக்கு 20 உலக கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது.

இதேவேளை அவுஸ்ரேலியா அணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடவுள்ளது.

இதற்கு முன்னர் 2010 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் 20 இருபது உலக கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் அவுஸ்ரேலியா அணி விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.