ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிவித்தால் நடவடிக்கை – வடக்கு ஆளுநர்

வடக்கு மாகாணத்தின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கே அரச கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன என சுட்டிக்காட்டிய ஆளுநர், தான் பதவியேற்றதில் இருந்து வடமாகாண அரச கட்டமைப்புக்களின் பல்வேறு மட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக கூறினார்.

அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக சிலர் தன்னைத் தொடர்பு கொள்ளவதற்கு அல்லது சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது என ஆளுநர் தெரிவித்தார்.

ஆகவே ஊழல், மோசடிகள் தொடர்பாக ஆதராங்களுடன் எவரும் தன்னை நேரடியாக சந்தித்தோ அல்லது தொடர்புக்கொண்டோ தகவல்களை வழங்க முடியும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார்.

அவ்வாறு தகவல்கள் வழங்கப்படும் பட்சத்தில், உரிய விசாரணைகளை மேற்கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயாராக இருப்பதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com