யாழில் புத்தர் சிலை கூடு மீது தாக்குதல்!

யாழ்ப்பாணம் – நாக விகாரை பிரதான வாயிலுக்கு அருகே வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையின் கண்ணாடி கூடு இனம் தெரியாதவர்களால் நேற்று (09) இரவு சேதமாக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பெருமளவு இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.