அமைச்சர்கள் மீது பாலியல் குற்றம் சுமத்திய பெண்!

பாகிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் ரெஹ்மான் மாலிக் தன்னை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்று அமெரிக்க பாகிஸ்தானியரான வலைத்தளப் பதிவாளர் சிந்தியா ரிச்சி எனும் பெண் குற்றம் சுமத்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்,

அத்துடன் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் யூசுப் ரஸா கிலானி மற்றும் முன்னாள் சுகாதார அமைச்சர் மக்தூம் ஷஹாபுதீன் ஆகியோர் தன்னை பாலியல் பலவந்தப்படுத்தியதாகவும் சிந்தியா ரிச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் பெனாஸிர் பூட்டோ தொடர்பாகவும் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

சிந்தியாவினால் குற்றம் சுமத்தப்பட்ட மூவரும் பாகிஸ்தானின் பிரதான எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் சிந்தியாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளனர்.