செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையின்போதே அவருக்கு தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இந்த வாரம் இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.