குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு எங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது – ஃபைஸர் நிறுவனம்

குழந்தைகளுக்கு 91 விழுக்காடு அளவிற்கு தங்கள் நிறுவனத்தின் தடுப்பூசிகள் பாதுகாப்பானது என ஃபைஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் ஆய்வு விபரங்கள் சமீபத்தில் வெளியாகின. அதில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடுவதற்கு அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தடுப்பூசியின் செயல் திறன் குறித்த மதிப்பாய்வை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

டெல்டா வகை வைரஸ் தாக்கத்திலிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற பல பெற்றோர்கள் மருத்துவமனைகளில் பதிவு செய்துள்ளதாகவும் ஃபைஸர் நிறுவனம் கூறியுள்ளது.

மேலும் தேவையான அளவு தடுப்பூசிகளை பைடன் நிர்வாகம் வாங்கியுள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.