ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிப்பது குறித்து இன்று ஆலோசனை!

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வுகள் அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) ஆலோசனை நடத்தவுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வரும் நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமுலில் உள்ளது.

இந்த நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர், மருத்துவத்துறை செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

பண்டிகைக் காலம் நெருங்குவதால் கூடுதல் தளர்வு அல்லது கட்டுப்பாடு விதிப்பது குறித்து இதில் ஆலோசிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் முதலாம் திகதி முதல் அனைத்து வகுப்பினருக்கும் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.