பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை இன்று (சனிக்கிழமை) சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்போது தமிழக நிலவரங்கள் குறித்தும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பிரதமரிடம் பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அத்தோடு, 2 அல்லது 3 நாட்களில் டெல்லியில் இருந்து சென்னை திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.

தமிழக ஆளுநனராக ஆர்.என்.ரவி பதவி ஏற்ற பின்னர் கடந்த மாதம் 23ஆம் திகதி டெல்லிக்கு பயணம் செய்தார். அப்போது டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.