கருணா விசரனுக்கு என்ன தண்டனை என்று இனிமேல்தான் தீர்மானிக்கப் போகிறேன்.!

சுவிஸ் நாட்டில் 2004 ம் ஆண்டு நடைபெற்ற பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வில்  கலந்துகொள்ள  சுவிஸ் நாட்டிற்கு வருகை தந்திருந்த  தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர்  திரு .கரிகாலன் அவர்களுடான நேர்க்காணலின் போது ஒட்டுக்குழு கருணா குறித்து அவர் பகிர்ந்த  விடையங்களை  காலத்தின் தேவை கருதி  தாரகம்  இணையத்தில்  மீள்  வெளியீடு செய்கின்றோம்


கேள்வி :-
கருணைாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினை இவ்வளவு நுட்பமாக, அதிலும் விரைவாக. பொதுமக்களுக்கோ போராளிகளுக்கோ பாதிப்பு ஏற்படாமல் தீர்க்கப்பட்டிருப்பது தமிழீழ மக்களுக்கெல்லாம் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருக்கிறது சர்வதேச ஊடகங்கள், சிங்கள ஊடகங்கள் பெரும் அனர்த்தம் நிகழப்போவதாக இது தொடர்பில் செய்திகளை, கட்டுரைகளை வெளியிட்டிருந்தபோதும். இப்பிரச்சனை விரைவாகவும். பாதிப்புக்கள் இன்றியும் தீர்க்கப்படும் என விடுதலைப் புலிகள் ஆரம்பத்தில் அறிவித்தது போன்றே. அதனைச் சாதித்தும் காட்டியிருக்கிறார்கள். வெளியாரின் கணிப்பீடுகளுக்கு முற்றிலும் மாறாக. இந்த உத்தரவாதத்தை தெரிவிக்கவும். அதனைச் செய்து முடிக்கவும் விடுதலைப் புலிகளால் எப்படி முடிந்தது!

பதில் :-
கருணைாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினையென்பது அவரது தனிப்பட்ட பலவீனங்களைமூடிமறைத்து தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காகத் தன்னை ஒரு பிரதேசவாதியாக தளபதிகளுக்கும், போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் காட்ட முனைந்தார். இவரது பிரதேசவாதத்துக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து விலகித் தனித்துச்செயல்படும் முடிவுக்கும் துணைபோகாது பல முக்கிய தளபதிகள் தேசியத் தலைவர் அவர்களின் அழைப்பை ஏற்று வன்னிக்குச் சென்றனர்.
மட்டு-அம்பாறை மக்களையும் இவரது பிரதேச வாதத்திற்கு பலாத்காரமான முறையில்
ஈடுபடுத்த முயன்றும் மக்கள் அவரது முயற்சிக்குத் துணைபோகவில்லை. போராளிகளும்ஆயுதமுனையில் அச்சுறுத்தப்பட்டு சூழ்நிலைக் கைதிகளாக்கப்பட்டிருந்தனர்.

கருணா தொலைக்காட்சிகளுக்கும். பத்திரிகைகளுக்கும் விடுத்த செய்திகள் முன்னுக்குப் பின்முரணாகவும், பயத்தின் காரணமாக தன்னை ஒரு பலசாலியாக காட்டிக்கொள்ளமேற்கொண்ட ஆயுதக் கண்காட்சியும். அறிவிப்புக்களையும் கொண் டு எமது தேசியத்தலைவர் அவர்கள் கருணாவின் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை துல்லியமாகக் கணித்துவைத்திருந்தார்
இதனால்தான் கருணைாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள பிரச்சினை எமது இயக்கத்தினுள்
ஏற்பட்ட பிரச்சினை என்றும். இதற்கு விரைவில் போராளிகளுக்கு பாதிப்புகளின்றி விரைவில் தீர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார் கருணாவிடமிருந்து தப்பிவரமுடியாது அவர்களின் விருப்பத்துக்குமாறாக காவலரண்களில் நிறுத்தப்பட்ட போராளிகளைப் பாதுகாக்கும் நோக்கில் தாக்குதல் வியூகங்களை அமைத்துக் கொடுத்தார். போராளிகளைப் பத்திரமாக மீட்டெடுப்பதற்கான பாதையைத் திறந்து ஒரு பயமுறுத்தல் தாக்குதலையை நடாத்துமாறு பணித்திருந்தார்
தாக்குதலுக்குத் தயாராக இருந்த தளபதிகளும், போராளிகளும் கருணாவின் பிரதேச
வாதத்திற்கு துணைபோகாது, ஒரு சகோதர யுத்தத்தை விரும்பாது விடுதலைப் புலிகளோடுவந்து இணைந்து கொண்டனர். கருணா தப்பி ஓடிவிட்டார். தேசியத் தலைவர் அவர்களின்கணிப்பும், நடவடிக்கையும் சரியாகவே இருந்தது

கேள்வி :-
இப்பிரச்சினை நடந்த காலகட்டங்களில், தலைவரின் அருகிருந்திருக்கிறீர்கள். கருணைாவின் பிடியில் இருந்து ஒருவாறு தப்பி வன்னி சென்ற நீங்கள், தலைவரை சந்திக்கின்றபோது தலைவரின் மனோநிலை எப்படியிருந்தது இப்பிரச்சினை தலைவரிடத்தே எத்தகைய பாதிப்பை
ஏற்படுத்தியிருந்தது?

பதில் :நான் தலைவர் அவர்களிடம்  வந்து  சேரும் முன்னர் பல தளபதிகள் தலைவரிடம் வந்து அங்குள்ள நிலைமைகளைத் தெளிவுபடுத்தி இருந்தார்கள். நான் சந்தித்தபோது நீங்கள்இவ்வளவு பேரும் வந்தது எனக்குப் போதும். இனிமேல் நான் நடவடிக்கை எடுப்பேன் எனசிரித்துக்கொண்டே நிமிர்ந்து நின்றார். கருணாவின் செயற்பாடுகள் பற்றியும், ஏன் இவ்வாறுசெய்தார் என்றும் தலைவர் அவர்களால் நம்பமுடியாமல் இருந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. “நான் பல துரோகத்தனங்களைச் சந்தித்திருக்கிறேன். துரோகிகளுக்குஎன்ன தண்டனை என்றும் எனக்குத் தெரியும். ஆனால் ஒரு விசரனுக்கு என்ன தண்டனைஎன்று இனிமேல்தான் தீர்மானிக்கப் போகிறேன்” என சிரித்துக்கொண்டே தலைவர் அவர்கள்தெரிவித்தபோது கருணைாவின் துரோகத்தனம் எமது விடுதலைப் போராட்டத்தையோ, தேசியத் தலைமையையோ எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்தி விடப்போவதில்லை என்பதைத்  தெளிவாக எடுத்துக் காட்டியது.

கேள்வி :-
கருணைாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினை, திடீரென தோற்றம் கொண்டதாகக் கருத முடியாது இதற்கு நீண்ட காலத் திட்டம் இருந்திருக்கக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது. அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தெரிந்ததா? இதற்குப் பின்னணியில் இனங்காணக்கூடிய சக்திகள் இருந்தனவா? இந்தப் பிரச்சினையை சிங்களத் தரப்பு எப்படி கையாள எண்ணியது?

பதில் :-கருணாவினால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினை நீ ண்ட காலமாகத் திட்டமிடப்பட்டிருந்ததாககருதமுடியாது. ஏனெனில் அவரது இறுதி முடிவு அத்தகைய ஒரு பின்புல உறுதிப்பாட்டோடு செயல்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. கருணா கடந்த காலங்களில் மட்டு அம்பாறை படையணிகளுடன் நின்று செயற்பட்டவர். அதிகமான காலப் பகுதியை காடுகளுக்குள் படையணிகளை ஒழுங்குபடுத்துவதிலும். அவர்களுக்கான கல்வி, பயிற்சி, தங்குமிட வசதிகளான அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்வதற்கான திட்டங்களை வகுத்துச் செயற்படுவதிலேயே அதிகமான நேரத்தை செலவு செய்து வந்தார்.

இந்த சமாதான காலத்தில்தான் அவர் வெளியில் வந்து மக்களைச் சந்திக்கவும்.
பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ள கிழக்காசிய நாடுகளுக்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும்சென்று பல அறிமுகங்களைத் தேடிக்கொண்டார். இந்தக் காலப்பகுதிக்குள்தான் சிரீலங்கா இராணுவத்தின் நெருங்கிய தொடர்புகளும் பேச்சுவார்தைகள் மூலமாகக் கிடைத்தது .

இதைத்தவிர வேறு எந்தப் பின்புல சக்திகளும் இவரின் பின்னணியில் நின்று செயற்பட்டதற்கான எந்த அறிகுறிகளையும் அவர் வெளிப்படுத்தியிருக்கவில்லை கருணாவின் தனிப்பட்ட மோசடிகளும், பலவீனங்களும் தேசியத் தலைமைக்குத் தெரியப்படுத்தப்பட்ட  பின்னர் அவசர அவசரமாக படைகளை களநிலைத் தளபதிகளோடு ஒழுங்குபடுத்தி முக்கிய தளபதிகளையெல்லாம் துார விலக்கிவைத்து தனது நம்பிக்கையானவர்களுக்கு மாத்திரம் தனது முடிவைத் தெரிவித்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் பிரதேசவாதத்தை போராளிகளுக்கு ஊட்டுவதற்கும் அரச அதிகாரிகளைப் பயன்படுத்திக்கொண்டார். இராணுவ உயர் அதிகாரி பலேகல்லவுடன் அடிக்கடி தொடர்புகளை வைத்துக்கொண்டார்.

இதனைத் தவிர தளபதிகளையோ போராளியையோ ஒரு நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையில் உள்வாங்கப்பட்டுத் தயார்படுத்தப்பட்ட அவரது முடிவுக்கு இறுதிவரை நின்று செயற்படக்கூடியவாறு விசுவாசமாக இருக்கவிலலையென்பதை அவரது இறுதி முடிவு எடுத்துக்காட்டுகிறது.

கருணாவை பயன்படுத்தி   விடுதலைப் புலிகள் இயக்கத்தை இரண்டாகப்  பிளவுபடுத்தி விடலாம்  விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள்  என்பதை இல்லாமல் செய்துவிடலாம், இருதரப்பாகப் பேச்சுவார்த்தை நடாத்தப்படவேண்டும் என சர்வதேச சமூகத்திற்கு எடுத்துக்காட்டலாம் எனும் திட்டத்துடன் சிரீலங்கா இராணுவம் பின்னணியில் இருந்து செயற்படுத்தியது.

இறுதியில் கருணா மட்டு-அம்பாறை மாவட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாத நிலையில் தப்பி ஓடி சிரீ லங்கா இராணுவத்திடமே தஞ்சமடைந்து அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான முடிவை ஏற்படுத்தியிருக்கின்றார்.

-நேர்கண்டவர் :ஜெயா 
வெளியீடு :எரிமலை இதழ் 
 இணைய தட்டச்சு:வேர்கள் இணையம்

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com