நெடுந்தீவில் வீடுபுகுந்து விக்ஷமிகள் அட்டகாசம்!

நெடுந்தீவு 6 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த விசமிகள் வீட்டு உடமைகளை அடித்து நொருக்கிய சம்பவம் தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவுவேளையே குறித்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் நேற்று காலையில் வீட்டு உரிமையாளர் அறிந்துள்ளார்.

இதன்போது வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள், கல்வேலிகள், நீர் பம்பி, மின்சார இணைப்புக்கள் என பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகள் நாசமாக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரால் நெடுந்தீவு பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதியில் வசிக்கும் நான்கு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதில் குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது