தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டு – இதுவரையில் 80 ஆயிரத்து 790 பேர் கைது

நாடளாவிய ரீதியில் கடந்த ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் இதுவரையான காலப் பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டில் 80 ஆயிரத்து 790 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக இடைவெளியைப் பேணாமை, முகக்கவசம் அணியாமை உள்ளிட்ட சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டிலேயே அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறிப்பாக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com