நாளை தேர்தல் ஒத்திகை

சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி ஒத்திகை தேர்தல் நாளை (7) காலை 10 மணியிலிருந்து 12 மணி வரை இடம்பெறவுள்ளது.

அம்பலாங்கொடை விலேகொட தம்யுக்திகாராம விகாரையின் மண்டபத்தில் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த தேர்தல் ஒத்திகை நடைபெறவுள்ளது.

இதற்காக 200 வாக்காளர்களை மாத்திரம் ஈடுபடுத்தப்படவுள்ளனர். சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி வாக்குச் சாவடியொன்றை நடத்திச் செல்லும் போது ஏற்படக்கூடிய சிக்கல்களை இணங்காண்பதே இந்த தேர்தல் ஒத்திகையின் நோக்கமாகும்.

சமூக இடைவெளியை பேணுதல், முகக்கவசம் அணிதல் மற்றும் கிருமி நீக்கி திரவத்தை உபயோகப்படுத்தல், தேசிய அடையாள அட்டையை கையால் பிடிக்காமல் கையாலுதல் போன்ற சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றி இந்த தேர்தல் ஒத்திகை நடத்தப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.