நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு விரைவிலேயே தீர்வு- ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் உள்ளிட்ட தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அனைத்திற்கும் விரைவில் தீர்வொன்று முன்வைக்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

வடமேல் மாகாண பாரிய கால்வாய் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் மககித்துல நீர்த்தேக்க நிர்மாணப் பணிகளின் தற்போதைய நிலைமைகளை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றம் இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் சென்று பார்வையிட்டனர்.

மககிதுல நீர்த்தேக்க நிர்மாணிப் பணிகள் நடைபெறும் விதம் குறித்தும் அதன் தற்போதைய முன்னேற்றம் குறித்தும் திட்டத்திற்கு பொறுப்பான அதிகாரிக்கும் அமைச்சருக்கும் இடையில் இதன் போது பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த நீர்த்ததேக்க நிர்மாணப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக ஏனைய அரச நிறுவனங்களினால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அமைச்சரின் தலையீட்டினால் தீர்க்கப்பட்டது.

தற்போது அடைந்திருக்க வேண்டிய முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் இருப்பது குறித்து அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்ததோடு துரிதமாக அதனை அதிகரித்து நிர்மாணப்பணிகளின் முன்னேற்றத்தை சிறந்த நிலைக்கு கொண்டு வருமாறு திட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த மேற்பார்வை விஐயத்தின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பதிலளித்தார்.

மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர்.

ஒப்பந்தங்கள் இருந்தால் அவற்றில் கையெழுத்திடப்பட வேண்டும். முதலீட்டாளர்கள் வரும் போது ஒப்பந்தங்களில் கைச்சாத்திடாமல் இருக்க முடியாது.

இன்று அல்லது நாளை கைச்சாத்திடுவதாக அர்த்தம் இல்லை. ஒரு முதலீட்டாளர் வரும் போது விரைவில் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு முடிக்க நாட்டின் நிர்வாகத்துக்கு திறமை இருக்க வேண்டும்.

அது அமெரிக்க முதலீட்டாளர்களா, சீன முதலீட்டாளர்களா, இந்திய முதலீட்டாளர்களா, ஜெர்மன் முதலீட்டாளர் அல்லது பிரிட்டிஷ் முதலீட்டாளர் என்று பிரச்சினை கிடையாது.
முதலீட்டாளர்களை கொண்டு வர முடியாது என்று எதிர்க்கட்சி கூறிய நிலையிலேயே இப்போது முதலீட்டாளர்கள் வந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.

எரிவாயு விலை உயர்ந்துள்ளது. எரிபொருள் விலை உயரும் அறிகுறிகள் இருப்பதாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.

இவை அனைத்தும் தற்காலிகமான பிரச்சினைகள். இது ஒரு தற்காலிக நெருக்கடி நிலையாகும்.

கொரோனா தொற்றுநோயினால் தான் இந்த நெருக்கடிகள் வந்துள்ளன. இந்த அனைத்தும் சில வாரங்களில் குறைந்துவிடும்.

எனவே, பொறுமையாக இருக்குமாறு மக்களிடம் கோருகிறோம். சில வாரங்களில் இந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பதிலளித்தார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com