கைக்குண்டுடன் பெண் ஒருவர் கைது!

மீகஹாவத்தை பகுதியில் வீடொன்றில் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கை குண்டு ஒன்றுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மீகஹாவத்தை, தெல்கொட பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றில் கைகுண்டொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய குறித்த பெண், குண்டசாலை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மீகஹாவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com