ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது – மோடி

ஆப்கானிஸ்தான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என பிரதமர் நரேந்திர மோடி உலக நாடுகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜி-20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டிலும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தீவிரவாதிகள் செயற்பட அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

தீவிரவாதம், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் எனவும் மோடி கேட்டுக்கொண்டார்.

ஆப்கானிஸ்தானில் 500 இற்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருவதை நினைவுக் கூர்ந்த மோடி, அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி கிடைக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.