அனைத்து திட்டங்களின் பயன்களும் மக்களுக்கு கிடைக்க வேண்டும்- பிரதமர் மோடி

மக்கள் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடனே நாங்கள் செயற்படுகின்றோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28ஆவது நிறுவன தின நிகழ்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மேலும் கூறியுள்ளதாவது, “மக்கள் தங்களுக்கு நன்மை பயக்கும் விதத்தில் மனித உரிமைகளை விளக்க ஆரம்பித்துள்ளனர்.

ஆனால், இந்த உரிமைகள் ஒரு அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும்போது முற்றிலும் மீறப்படுகின்றன.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நடத்தை நமது ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும். இத்தகைய மனநிலை மனித உரிமைகள் என்ற கருத்தாக்கத்தையும் பாதிக்கிறது.

ஆகையால்தான் அனைவருக்கும் அனைத்து திட்டங்களின் பயன்களும் கிடைப்பதை உறுதி செய்யும் குறிக்கோளுடன் நாங்கள் முன்னோக்கி செல்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.