வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டு மதிலில் மோதி விபத்து – சாரதி காயம்

யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் நேற்று (புதன்கிழமை) டாட்டா ரக வாகனம் வீட்டின் மதிலில் மோதியதில் ஒருவர் காயமடைந்ததாக ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

அனுராதபுரத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த சிறிய டாட்டா ரக வாகனம் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததால் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தில் வாகன சாரதி காயமடைந்துள்ளதுடன், வாகனம் பலத்த சேதமடைந்ததுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது வீட்டின் மதில் உடைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com