நாட்டின் பல பகுதிகளில் திடீரென மின் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியானது!

நாட்டின் பல பகுதிகளில் நேற்று(செவ்வாய்கிழமை) திடீரென மின் விநியோகம் தடைப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.

மின் விநியோகக் கட்டமைப்பில் மின்னல் தாக்கம் ஏற்பட்டமையே இதற்கான காரணம் என மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா தெரிவித்துள்ளார்.

மின் விநியோகம் தடைப்பட்டமைக்கு எவ்வித மோசடி செயற்பாடுகளும் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்று முற்பகல் 11.45 அளவில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com