இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் போட்டியிடும் இலங்கை பெண்

இத்தாலி- மிலான் நகரசபை தேர்தலில் இலங்கை பெண்ணொருவர் போட்டியிடுகின்றார்.

இலங்கை பெண்ணான தம்மிகா சந்திரசேகர, இலக்கம் 8இல் போட்டியிடுவதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண், சுமார் 30 வருடங்களாக இத்தாலியில் வசித்து வருவதுடன் பல சமூக பணிகளில் ஈடுபடும் இவருக்கு, அதிக வாக்குகள் கிடைக்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த தேர்தல் தொடர்பாக தம்மிகா சந்திரசேகர, மிலான் பகுதியில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் எனக்கு வாக்களிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.