‘சக்திமான்’ மறு ஒளிபரப்பால் முதலிடத்துக்கு முன்னேறிய புராதன தொலைக்காட்சி!

இந்தியாவின் முதன்மை தொலைக்காட்சியான சன் டிவியை கடந்த சில நாட்களாக இரண்டாம் இடத்துக்கு தள்ளியுள்ளது டிடி தூர்தர்ஷன் பொதிகை டிவி.

இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமுலில் உள்ள காரணத்தால் புதிய நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.இதனால் மக்களின் மனத்தை கவர்வதற்கு பிரபலமான பழைய நிகழ்ச்சிகளை அனைத்து தொலைக்காட்சிகளும் மறு ஒளிபரப்பு செய்ய ஆரம்பித்துள்ளமை யாவரும் அறிந்ததே.

அந்தவகையில் 90 களில் பிரபலமான தொடரான சக்திமான் தொடரை பொதிகை டிவி மறு ஒளிபரப்பு செய்வதால், பார்வையாளர்கள் அதிகம் பார்க்கத் தொடங்கியுள்ளதாகவும் இதனால் முதல் இடத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com