ரொகான் ரத்வத்தை விவகாரம்- கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது கோபத்தை வெளிக்காட்டிய இராஜாங்க அமைச்சர்!

இராஜாங்க அமைச்சர் ரொகான் ரத்வத்தையின் மட்டக்களப்பு விஜயம் குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் மீது இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தனது கோபத்தை  வெளிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில்  இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திய இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், ஊடகம் ஒன்றின் பெயரைச் சொல்லி குறித்த ஊடகம் உண்மைக்கு புறம்பான வகையில் செய்தி வெளியிட்டுள்ளதாக கூறினார்.

அத்துடன் அங்கு அவரிடம் கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர் ஒருவரை,  நீங்கள்தான் இந்த பொய்யான செய்திகளை அனுப்புவது என்றும் நீங்கள் எந்த ஊடகத்திற்கு செய்தி அனுப்புகிறீர்கள் என்றும் இராஜாங்க அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.