கொலைசெய்து உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்ட தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டதாக கூறப்படும் நான்கு பேரை சுட்டுக் கொன்றதாகவும் அவர்களின் உடல்களை பொது இடத்தில் தொங்கவிட்டுள்ளதாகவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

மரணதண்டனை மற்றும் உறுப்பை துண்டித்தல் போன்ற தீவிர தண்டனைகள் மீண்டும் தொடரும் என தலிபான் அதிகாரி எச்சரித்த ஒருநாள் கடந்துள்ள நிலையில் இந்த கொடூரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நகரின் மத்தியில் உள்ள கிரேனில் ஒரு உடல் தொங்கவிடப்பட்டதாகவும் மற்ற மூன்று உடல்கள் நகரத்தின் சதுக்கத்தில் போடப்பட்டுள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் ஆப்கானிஸ்தானில் பஊடகவியலாளர் ஹானர் அகமது என்பவரும் அடங்குவதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com