இலங்கையில் பரவிவரும் டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வ பெயர்கள்

இலங்கையில் பரவிவரும் டெல்டா திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தனது ருவிட்டர் கணக்கில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) பதிவிட்டுள்ளார்.

இதன்படி, 701- S  என்ற வைரஸ் திரிபின் உப பிறழ்வுக்கு  AY28 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அதேநேரம், இலங்கையில் பரவலடைந்து வரும் டெல்டா உப பிறழ்வின் விஞ்ஞான பெயராக B.1 617 2.28 என பெயரிடப்பட்டுள்ளது..

அத்துடன் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்ட 95 சதவீதமான நோயாளர்களுக்கு டெல்டா கொரோனா வைரஸ் திரிபே பரவியுள்ளதாக அவர் பதிவிட்டுள்ளார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com