கொரோனா தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 54 ஆயிரத்து 532 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 12 ஆயிரத்து 531 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 609 ஆக பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com