நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும்

நாட்டின் பல பாகங்களில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது

இதன்படி மேல் சப்ரகமுவ மத்திய வட மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் குறித்த மழைவீழ்ச்சி பதிவாகும் என அறிவித்துள்ளது

இதேவேளை கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் ஏற்படும் மின்னல் தாக்கம் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பொது மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

மேலும் வடக்கு வட மத்திய வட மேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.