கைக்குண்டை தயாரிக்க உதவிய குற்றச்சாட்டில் 22 வயதுடைய இளைஞன் கைது !

நாரஹேன்பிட்ட வைத்தியசாலையின் கழிவறையில் இருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணையில் மற்றொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலையில் வசிக்கும் 22 வயதுடையவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபருக்கு வெடிகுண்டு தயாரிக்க குறித்த நபர் உதவியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாரஹேன்பிட்டி வைத்தியசாலையில் இருந்து அண்மையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டமை தொடர்பாக, திருகோணமலை – உப்புவெளி பகுதியை சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.