பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுங்கள் – கொழும்பு மாநகரசபை

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது.

கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திஸாநாயக்க, சொத்தின் உரிமையைப் பாதுகாக்க மாநகர சபையின் கீழ் சொத்துகளை பதிவு செய்வது அவசியம் என தெரிவித்துள்ளார்.

மேலும் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இதுவரை பதிவு செய்யப்படாத சொத்துக்கள் பற்றிய தகவல்களை பெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.