அறிகுறி தென்படாதோரை கண்டறிவதே சவால் மிக்கது!

சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி இப்போது நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகின்றது என்று தொற்று நோயியல் தலைவர், வைத்தியர் சுதத் சமவீர தெரிவித்துள்ளார்.

இன்று (10) ஊடகங்களிடம் பேசும் போது இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று நோயாளிகளை அடையாளம் காண்பதே எமது கையில் உள்ள சவாலாகும். அத்தகைய நபர்களை கண்டறிய சிறப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து செல்வது இரத்த மாதிரி சோனையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

நபர்களை கண்டறியும் ஒருமுறையானது, ‘அதிக ஆபத்துள்ள வலயங்களுக்கு சென்று மக்களிடையில் கொரோனா பரிசோதனை செய்வதாகும்.’ இதன்மூலம் வைரஸ் பரவல் உள்ளதா என்ற தீர்மானத்துக்கு வரமுடியும்.

இந்த நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடைந்து சென்றால், கொரோனா எண்ணிக்கையை குறைக்க முடியும். படிப்படியாக நாளாந்த நடவடிக்கைகள் மீளத் தொடக்கும்.

நாட்டில் வைரஸ் இருக்கும் வரை அதனை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர வேண்டும். உலகம் தொடர்ந்து வைரஸ் விளைவுகளை எதிர் கொண்டிருப்பதால் ஒரு தடுப்பூசி உருவாகும் வரை நீண்ட காலத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க வேண்டும்.

குறிப்பாக சமூக விலகல், கை கழுவுதல், முகக்கவசம் அணிதல் என்பவற்றை பல மாதங்களுக்கு தொடருவது அவசியம் – என்றார்.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com