வவுனியாவில் 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

வவுனியாவில் இந்த வருடம் ஜனவரி முதல் இன்று (சனிக்கிழமை) அதிகாலை 8 மணிவரையுடன் நிறைவடைந்த காலப்பகுதியில், 806.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது .

மேலும் இடைக்கால பருவ மழை, மாலை வேளைகளில் இன்னும் சில தினங்கள் நீடிக்கும்  என்பதுடன் இடி, மின்னல் தாக்கம் அதிகரிக்கும் என மாவட்ட வளிமண்டல நிலைய பொறுப்பதிகாரி தா.சதானந்தன் தெரிவித்துள்ளார்.

ஆகவே, பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை  இந்த மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இன்று அதிகாலை 8 மணியுடன் நிறைவடைந்த காலப்பகுதியில் மாத்திரம், 117.1 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com