ஹரியானா மாநிலத்துடன் இணைந்து கிழக்கு மாகாணத்தில் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை!

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஹரியானா மாநிலத்துடன் இணைந்து பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக ,ஹரியானா மாநில ஆளுநருடன் கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றுள்ளது.

அண்மையில் இந்தியாவுக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்த பின்தங்கிய கிராமிய அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஆகியோர் ஹரியானா மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்ட போது ,ஹரியானா மாநில ஆளுநர் மேதகு பண்டாரு தத்தாத்திரேயா அவர்களுடன் ஹரியானாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார அபிவிருத்திகள் தொடர்பாக மாநில ஆளுநர் மேதகு பண்டாரு தத்தாத்திரேயா அவர்களுடன் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.

இச்சந்திப்பில் இந்தியாவில் தொழில்துறையிலும் இ விவசாயத்திலும் முன்னணி மாநிலமாக ஹரியானா மாநிலம் திகழ்கிறது.கொவிட் -19 தொற்று காலப்பகுதியிலும் கூட இத்துறைகளில் வளர்ச்சி மேல்நோக்கி சென்றுள்ளது பாராட்டத்தக்கது.

எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்தில் ஹரியானா மாநிலத்துடன் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலில் ஹரியானா மாநில ஆளுநர் மேதகு பண்டாரு தத்தாத்திரேயா தனது ஆதரவையும்,ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்தார்.