பதவியில் இருந்து விலகும் கடிதத்தை கையளித்தார் டபிள்யூ.டி.லக்ஷ்மன்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பதவியில் இருந்து விலகும் கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பியுள்ளதாக பேராசிரியர் டபிள்யூ.டி.லக்ஷ்மன் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, இன்று (செவ்வாய்க்கிழமை) தமது உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் நாளை அவரது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.