கொரோனா தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 354 பேர் குணமடைவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ஆயிரத்து 354 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 649ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 88 ஆயிரத்து 482ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 431ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.